அல் கொய்தா அமைப்பின் இரட்டை கோபுர தாக்குதல் – அமெரிக்காவின் 20 ஆண்டு நீங்கா நினைவுகள்

sadness ,terrorism
newyork alquida

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள உலக வர்த்தக மையக் கோபுரங்களான இரட்டைக் கோபுரங்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டது.

அல்-கய்தா எனப்படும் தீவிரவாத இயக்கத்தினர் ஏற்படுத்திய இத்தாக்குதலில் அப்பகுதியில் இருந்த கிட்டத்தட்ட 2977 பேருக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதல்கள் நடைபெற்று இருபது வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

கனடா முழுவதும் உள்ள பல்வேறு சமூக மக்கள் பயங்கரவாதத் தாக்குதலில்மரணம் அடைந்தவர்களை 20 ஆவது ஆண்டுவிழாவில் நினைவஞ்சலி செலுத்தி வணங்குகின்றனர். இரட்டைக் கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 24 பேர் கனடியர்கள் ஆவர்.

அல்கொய்தா அமைப்பினர் தீவிரவாத தாக்குதலை ஏற்படுத்துவதற்கு நான்கு விமானங்களை கடத்தி சென்றனர். 2 விமானம் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரத்தின் மீது மோதியது. மூன்றாவது பென்சில்வேனியாவில் விபத்தில் சிக்கியது. நான்காவது விமானம் வாஷிங்டன் டிசி பகுதியில் பென்டகனில் மூழ்கியது.நியூயார்க் நகரின் சிறப்பு சின்னமாக இருந்த இரட்டைக் கோபுரங்கள் தீவிரவாத தாக்குதல் மூலம் தகர்க்கப்பட்டது.

பீச்வுட் 9/11 நினைவிடத்தில், ஒட்டாவா நகரில் உள்ள அமெரிக்காவின் தூதரகம் இரட்டை கோபுர தாக்குதல் 20 ஆண்டு நிறைவு நாளை நினைவு தினமாக அனுசரிக்க உள்ளது. மணிதொபா மற்றும் வடக்கு டகோட்டா பகுதிகளுக்கு இடையிலான எல்லையில் உள்ள அமைதி தோட்டம் நினைவு தினத்தைக் குறிக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும் டொரண்டோ அடையாளத்தில் அனைத்து விளக்குகள் மங்கலாக ஒளிர்விக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Gander மேயர் பெப்ஸி பார்வெள் ” செப்டம்பர் 11, 2001 ஆம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதல் நிகழ்வுகள் பல்வேறு வாயிலாக உலகை ஆழமாக பாதிக்கச் செய்தன ” என்று அறிக்கையில் கூறினார்.