மூன்றாவது கட்ட தளர்வுகளை அறிவித்த கனடாவின் முக்கிய மாகாணம்!

British Columbia
Parts of British Columbia were

கனடாவில் Covid-19 வைரஸ் தொற்று தொடர்ந்து தீவிரமாக பரவி வருகின்றது. நீண்ட காலமாக வைரஸ் தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர படாமல் இருப்பதால் கனடிய அரசாங்கம் தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும் ஊரடங்கு தளர்வு களை அறிவித்துக் கொண்டு வருகிறது.

நிற வாரியாக தொற்றுக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பிராந்தியங்கள் ஆக பிரித்து அவற்றில் ஊரடங்கு தளர்வுகளையும் கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்து வருகிறது.

இந்நிலையில் கனடாவின் அல்பேட்டா பகுதியில் தொற்றுக்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதன் காரணத்தால் கட்டுப்பாட்டு தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இரண்டு கட்டங்களாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது மூன்றாவது கட்ட தளர்வுகளை எதிர் நோக்கி அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.

மேலும் அல்பேட்டா பகுதியில் மூன்றாவது கட்ட தளர்வுகளுக்கு தாமதமாகக் கூடும் என்று அப்பகுதியின் சுகாதார அமைச்சர் டைலர் சான்ட்ரோ அறிவித்துள்ளார்.

மேலும் அல்பேட்டா பகுதியில் சில நாட்களாக தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அல்பேட்டா பகுதியின் மருத்துவமனைகள் முழுவதும் சுமார் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் Covid-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்பொழுது மூன்றாவது கட்ட தளர்வுகள் அறிவித்தால் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அவர் கூறியுள்ளார்.