பொதுசேவை ஊழியர்களுக்கு ஊதியமற்ற விடுப்பு – முழுமையாக தடுப்பூசி போட வேண்டும்

kenney alberta
alberta

Covid-19 வைரஸ் தொற்றின் தீவிரத்தை எதிர்த்துப் போராடுவதற்கான உதவிகளை கனடிய ஆயுதப்படைகள் மற்றும் பிற இடங்களிலிருந்து மருத்துவமனைகளுக்கு வழங்குகின்றன என்று அல்பேட்டாவின் முதல்வர் ஜேசன் கென்னி கூறினார்.

பத்துக்கும் மேற்பட்ட தீவிர சிகிச்சை பிரிவு வல்லுனர்களை மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மாகாண அரசாங்கம் உறுதி செய்துள்ளதாக ஜேசன் தெரிவித்தார்.

மத்திய அல்பேட்டா பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் Red cross எனப்படும் செஞ்சிலுவை மருத்துவ பணியாளர்கள் மற்றும் தீவிர சிகிச்சையில் அனுபவம் உள்ளவர்கள் நியமிக்கப்பட உள்ளனர் .

ஐந்து அல்லது ஆறு தீவிர சிகிச்சை ஊழியர்கள் கொண்ட மருத்துவ குழு ஒன்றினை Northern oil hub நகரம் என்று அழைக்கப்படும் போர்ட் மெக் முர்ரேக்கு உதவிபுரிய அனுப்ப உள்ளதாக நியூஃபவுண்ட் லேண்ட் மற்றும் லேபரடார் தெரிவித்துள்ளன.

கல்கேரியில் வியாழக்கிழமை “அல்பேட்டா சுகாதார பணியாளர்களின் உதவிகளுக்கு நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என்பது எனக்கு தெரியும், இந்த நெருக்கடியான நிலையில் அல்பேட்டா மக்கள் அனைவரும் அனைத்து உதவிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்கள் ” என்று ஜேசன் கென்னி கூறினார்.

நவம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் அனைத்து பணியாளர்களுக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட வேண்டும் .குறிப்பிடப்பட்ட தேதிக்குள் தடுப்பூசி போடப்படவில்லை எனில் தங்கள் சொந்த பொருளாதார செலவில் எதிர்மறையான சோதனை முடிவுகளை காட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 முதல் 20 சதவீதம் பொதுத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்று பொதுத் துறையின் தலைவர் டிம் கிராண்ட் கூறினார். 25,000 பொதுத்துறை ஊழியர்கள் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கென்னி அறிவுறுத்தினார். மறுப்பவர்களுக்கு ஊதியமற்ற விடுப்பு வழங்கப்படும் என்று டிம் தெரிவித்தார்