கனடா திரும்புவோருக்காக அறிமுகமாகும் புதிய கொரோனா விதிமுறைகள்: மீறினால் கடும் தண்டனை!

Air-Canada
Returning to Canada

தேசிய விமான சேவை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கனடா திரும்புவோருக்காக புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள கொரோனா விதி ஒன்று கடும் குழப்பத்தை ஏற்படுத்தும் என அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஜனவரி 7ஆம் தேதி முதல் வேறு நாடுகளிலிருந்து கனடா திரும்புவோருக்காக புதிய விதிமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அந்த விதிகள் பின்வருமாறு

  • அது என்னவென்று பார்த்தால், 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், கனடா புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
  • அதில், தங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டும் மின்னணு ஆவணம் ஒன்றை பயணிகள் சமர்ப்பித்தால் மட்டுமே கனடா செல்லும் விமானத்தில் ஏற அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
  • அத்துடன், அந்த சோதனை பி.சி.ஆர் முறையில் செய்யப்பட்டதாக மட்டுமே இருக்கவேண்டும்.
  • அதுமட்டுமின்றி, கொரோனா இல்லை என்றாலும் கூட, கனடா வந்ததும் அவர்கள் 14 நாட்களுக்கு தங்களை கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
  • விதிகளை மீறுவோருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், 750,000 டாலர்கள் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றும் புதிய விதிமுறை கூறுகிறது.

இந்நிலையில், இதுவரை போக்குவரத்து துறைக்கு எந்தெந்த ஏஜன்சிகளால் செய்யப்படும் சோதனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை என்பது குறித்தும், கொடுக்கப்பட்ட ஆவணம் செல்லத்தக்கதா என்பதைக் குறித்தும் விவரங்கள் அளிக்கப்படாத நிலையில், இந்த புதிய விதிமுறை பயணிகளுக்கு கடும் குழப்பத்தையும் சலிப்பையும் ஏற்படுத்தும் என தேசிய விமான சேவை கவுன்சிலின் தலைவரான Mike McNaney கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: கனடாவில் பல அரசியல்வாதிகள் திடீர் ரஜினாமா! பெருந்தொற்று காலத்தில் உருவெடுத்த தலைவலி!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.