கனடாவில் கட்டாயமாக்கப்படுகிறதா வெப்பநிலை சோதனை? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விமானப் பயணிகளுக்கான வெப்பநிலை சோதனைகளை கட்டாயமாக்கப் போவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதிபட அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டுள்ளதால், விமானப் பயணங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே விமானப் பயணங்களின் போது கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக, விமானப் பயணிகளுக்கான வெப்பநிலை சோதனைகளை கட்டாயமாக்கப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

கனடா முழுவதிலும் உள்ள மாகாணங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால், நோய்த்தொற்றுகள் மீண்டும் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது அலை வீசுவதை தடுக்க, முன்னெச்சரிக்கைகள் மற்றும் மேம்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms