ஏர் கனடாவில் பயணிக்கப் போறீங்களா? – உங்களுக்கு ஒரு சர்பிரைஸ் கிஃப்ட் காத்திருக்கு

air canada announced special christmas gifts
air canada

கிறிஸ்துமஸ் பண்டிகை இதோ வந்துவிட்டது. வெளிநாடுகளில் தங்கி வேலைப் பார்க்கும் மக்கள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு என்ற நீண்ட விடுமுறையைக் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கும், நாட்டுக்கும் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சொந்த ஊருக்கு திரும்பும் மனநிலை இருக்கே… அப்பப்பா… அதைச் சொல்லி மாளாது. அப்படியொரு மகிழ்ச்சி இருக்கும். நாம் இத்தனை ஆண்டுகாலமாக பார்த்து வளர்ந்த இடம் தான் என்றாலும், வெவ்வேறு இடங்களில் பணிபுரியும் மக்கள், விடுமுறை என்றால், தாங்கள் மகிழ்ச்சியாய் நேரத்தை செலவிட விரும்புவது தங்களின் சொந்த ஊர் தான்.

நமது கனடாவில் வசிக்கும் தமிழ் மக்களும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏர் கனடா ‘வாவ்’ சொல்ல வைக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று(டிச.24) மற்றும் நாளை (டிச.25) ஏர் கனடாவில் பயணிக்கும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசளிக்கப்பட உள்ளது. டிச.24 அன்று பயணிக்கும் குழந்தைகளுக்கு பல பொம்மைகளின் கலெக்ஷனும், டிச.25 என்று பயணிக்கும் குழந்தைகளுக்கு லின்ட் டெடி பொம்மையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்