நடு வானில் ஏர் கனடா விமான என்ஜின் செயலிழந்தது! பீதிக்குள்ளாக்கிய திக் திக் நொடிகள்!

aircanada
737 Max 8 airplanes, according to testimony prepared for a Capitol Hill hearing on Wednesday. (AP Photo/Ted S. Warren)

ஏர் கனடா போயிங் கோ 737-8 விமானம் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்துக்கும், கனடாவின் மாண்ட்ரீலுக்கும் இடையில் மூன்று பணியாளர்களுடன் பயணிக்கும் போது நடுவானில் இயந்திர சிக்கல் ஏற்பட்டது.

இது விமானம் மீண்டும் அரிசோனாவின் டியூசன் விமான நிலையத்திற்கு  திருப்பிவிடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாக  கனேடிய விமான நிறுவனம் வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானிகள் ஒரு “எச்சரிக்கை அறிகுறியை” கண்டனர். மேலும் “ஒரு இயந்திரத்தை மூட முடிவு செய்தனர்” என்று ஏர் கனடா செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

பின்னர் விமானம் டியூசனுக்கு திருப்பி விடப்பட்டது. அங்கு அது சாதாரணமாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் டிச., 22 ல் நடந்த நிலையில், இது குறித்த விவரங்கள் தற்போது தான் வெளியானது.

விமான சீரமைப்பு குழுவினர் செய்த ஆய்வில், இடது எஞ்சின் ஹைட்ராலிக் குறைந்த அழுத்த அறிகுறியைப் பெற்றது தெரிய வந்தது.

விமானத்தைத் திருப்புவதற்கு முன்பு, பான் பான் அவசரநிலையை அறிவித்தனர் என்று பெல்ஜிய விமான செய்தி வலைத்தளமான ஏவியேஷன் 24.be தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்க ராய்ட்டர்ஸ் ஊடகம் கோரிக்கை விடுத்த நிலையில் போயிங் உடனடியாக பதிலளிக்கவில்லை.

யு.எஸ். ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் மென்பொருள், அமைப்பு மற்றும் பயிற்சி மேம்பாடுகள் பற்றிய விவரங்களை கோடிட்டுக் காட்டிய நிலையில், போயிங் மற்றும் விமான நிறுவனங்கள் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு முன்பு அந்த கட்டுப்பாடுகளை பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இதையும் படியுங்க: கனடா மக்களுக்கு இரட்டை மகிழ்ச்சி! கொரோனா தடுப்பில் எட்டப்பட்ட அடுத்த நிலை!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.