ஒன்ராரியோ மாகாணத்தில் வைரஸ் தொற்று தடுப்பூசி மருந்து செலுத்துவதற்கான வயது வரம்புகள் குறைப்பு!

Female nurse on phone in PACU of hospital
A nurse works in a hospital. (Dana Neely/Getty Images)

ஒன்ராரியோ மாகாணத்தில் வைரஸ் தொற்று தடுப்பூசி மருந்து செலுத்துவதற்கான வயது வரம்புகள் குறைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வாரம் முழுவதும் 40 வயது மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணத்தில் தற்பொழுது covid-19 வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள காரணத்தால் தடுப்பூசி மருந்து விநியோகிக்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாகாணத்தின் தடுப்பூசி மருந்து பெற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

40 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பட்டியலோடு இதயம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள், நீரிழிவினால் பாதிப்படைந்தவர்கள் மற்றும் பலவிதமான புற்று நோயினால் பாதிப்பு அடைந்தவர்களுக்கும் உடனடியாக தடுப்பு ஊசி செலுத்தும் பட்டியலில் இணைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50% தடுப்பூசி மருந்துகள் ஆனது covid-19 வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள பகுதிகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அறிவியல் ஆலோசகர்களின் பரிந்துரைகளின்படி தீவிரமடைந்த நிலையில் இருப்பவர்களுக்காக தடுப்பூசி மருந்து இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த வாரத்தின் தொடக்கத்திலிருந்து தலா ஒருவர் வீதம் தடுப்பூசி மருந்துகள் மீண்டும் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தின் முடிவில் 100க்கும் மேற்பட்ட மருந்தகங்களில் பைசர் பயோ டெக், மற்றும் மாடர்னா போன்ற தடுப்பூசி மருந்துகள் 18 வயதில் மேற்பட்டோருக்கு வினியோகிக்க தொடங்கிவிட்டது என்று தெரிவித்துள்ளனர்.