ஆப்கானிஸ்தானின் அகதிகளை அவசரமாக மீள்குடியேற்றம் செய்யும் நடவடிக்கைகள் – கனடா வரவேற்பு

cn tower toronto
மீள்குடியேற்ற நடவடிக்கைகள்

ஆப்கானிஸ்தான் அகதிகள் கனடாவிற்கு வந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள கனடிய ராணுவப் படையினரை இவர்கள் ஆதரித்துள்ளனர். ராணுவத்தினரை ஆதரித்த ஆப்கானிஸ்தான் அகதிகளின் முதல் விமான பயணம் இதுவாகும்.

அகதிகளின் முதல் விமான பயணம்

விமானத்தில் பயணித்த அகதிகளின் எண்ணிக்கை மற்றும் கனடாவில் எந்தப் பகுதிகளில் மீண்டும் குடியேற்ற படுவார்கள் போன்றவை குறித்து மத்திய அரசாங்கம் தகவல்கள் வெளியிடவில்லை. வெளியேற்றப்பட்டவர்கள் பாதுகாப்பதன் அவசியம் குறித்து அறிவிக்கவில்லை.

ஆப்கானிஸ்தானிலிருந்து அகதிகளை வெளியேற்றுவதற்காக அரசாங்கம் அறிவித்தது. உறுதியளித்த பின்னர் பல விமானங்கள் வாயிலாக அகதிகள் வெளியேற்றப்பட்டதில் இதுவே முதல் விமானமாகும்.ஆப்கானிஸ்தானில் கனடாவிற்கு துணையாக ஆப்கானியர்கள் பலரும் பங்கேற்றனர். கனடாவின் பணிக்கு ஆப்கானியர் துணை நின்றதால் தாலிபான்களின் இலக்குகளாக மாறிவிட்டனர்.

கனடாவின் பணியில் பங்களிப்பு:

சமையல்காரர்கள், துப்புரவாளர்கள், ஓட்டுனர்கள் ,மொழிபெயர்ப்பாளர்கள், கட்டிட பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் போன்ற அனைவரும் கனடாவின் ஆயுதப்படையில் ஒருங்கிணைந்தவர்களாக கருதப்பட்டு அவர்களின் மீள்குடியேற்றம் செய்வதற்கான திட்டங்களை அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்தது.

ஆப்கானியர் ஆதரவு

ஆஃப்கானிஸ்தானில் கனடா ராணுவத்தினரின் பணியை தொடர்ந்து ஆதரிப்பதற்காக சிக்கலில் தவிக்கும் ஆப்கானியர்கள் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட்டு வருகின்றது என்று கூறப்பட்டுள்ளது

கனடா வரவேற்பு

தகுதியான நபர்களை இனம் காண்பதற்காக 24 மணி நேரம் பணியில் செயல்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளனர். கனடாவிற்கு வரும் அகதிகளை வரவேற்பதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது