விமானங்கள் மூலம் கனடாவிற்கு வந்திறங்கும் அகதிகள் – ஆப்கானிஸ்தானில் மக்களின் நிலைமை என்ன?

Pic: AP
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் அகதிகள் :

ஆப்கானிஸ்தானிலிருந்து அகதிகள் விமானம் மூலம் கனடாவிற்கு வருகை புரிகின்றனர். ஆப்கானிஸ்தானின் தலைநகரம் காபூல் தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து ஆப்கானிய மக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறி வெவ்வேறு நாடுகளுக்கு தப்பித்துச் செல்ல முயற்சித்து வருகின்றனர். தாலிபன் ஆட்சி அமைத்து விட்டால் மக்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டு விடும் என்ற அச்சத்தினாலேயே ஆப்கானிஸ்தானிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மக்கள் இடம் பெயர்ந்து செல்கின்றனர் .

கனடாவின் குடியேற்றத் துறை அமைச்சர் மார்க்கோ மென்டிஸினோ மற்றும் அவரது 3 அமைச்சரவை உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தானில் தவித்துக் கொண்டிருக்கும் மக்களின் நிலைமை குறித்த தகவல்களை இன்று காலை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காபூல் விமான நிலையத்தில் இருந்து 106 ஆப்கானியர்களை கனடியர்கள் வெளியேற்றி நாட்டிற்குள் கொண்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்த பின்னர் செய்தியாளர் சந்திப்புகள் வருகின்றது.

தேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ஹர்ஜீத் சர்ஜன்,வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் கார்னியோ மற்றும் பாலின சமத்துவ அமைச்சர் மரியம் ஆகியோருடன் மென்டிஸினோ இன்று கலந்து கொள்வார் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஆப்கானிஸ்தான் கடந்த வாரம் தாலிபான்களால் கைப்பற்றப்பட்டது. வெள்ளிக்கிழமை தலைநகர் காபூலில் இருந்து புறப்பட்ட விமானம் கனடாவிலிருந்து இரண்டாவது விமானம் ஆகும் .இவற்றில் 175 ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்கள் மற்றும் 13 பேர் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் கனடிய தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளர்களாகவும் மற்ற பணியில் உள்ள ஊழியர்களாகவும் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது