ஆப்கானிய அகதிகள் ஆச்சரியம் – உக்ரேனிய அகதிகளுக்கு மட்டும் முன்னுரிமை வழங்குகிறதா கனடா?

ஆப்கானிஸ்தானை தாலிபன் அமைப்பு ஆக்கிரமித்த போது லட்சக்கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு அண்டை நாடுகளுக்கு குடியேறினர். ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக வெளியேறிய ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் பாதுகாப்பாக கனடாவில் குடியேறுவதற்கு உதவுவதாக கனடிய அரசாங்கம் உறுதியளித்தது.

ரஷ்யாவின் இரக்கமற்ற தாக்குதலால் உக்ரேனில் இருந்து வெளியேறி வரும் அகதிகளுக்கு ஆதரவாக கனடிய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .உக்ரேனிய மக்கள் கனடாவில் எளிதில் குடியேறுவதற்காக விரைவான விசாக்களை வழங்கிவருகிறது. உக்ரேனிய மக்களுக்கு மட்டும் விசா விண்ணப்பங்களை விரைவு படுத்தப்படுவது ஏன் என்று ஆப்கானிய சமூகத்தினர் கேள்வி எழுப்புகின்றனர்.

உக்ரைனில் நடைபெற்று வரும் போரின் பிரதிபலிப்பாக கனடாவில் உக்ரேனியர்களை குடியேற்றூவதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படுவதை பார்க்கும் போது கனடாவின் முன்னுரிமை யாருக்கு என்பது வியக்க வைக்கிறது என்று ஆப்கானிய அகதிகள் தெரிவித்துள்ளனர்.

40000 ஆப்கானிய அகதிகளை கனடாவிற்கு கொண்டுவருவதாக கனடிய அரசாங்கம் உறுதி அளித்திருந்தது. ஆப்கானிஸ்தானில் உள்ள கனடிய தூதரக பணியாளர்கள்,ராணுவப் படைகள் ,ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் LGBTQ சமூகத்தின் உறுப்பினர்கள் உட்பட அனைவரையும் பாதுகாப்பாக கனடாவில் குடியேற்றுவதாக அறிவித்தது.

blackcommunity

கனடிய அரசாங்கம் உறுதியளித்ததிலிருந்து 8580 ஆப்கானிய அகதிகள் மட்டுமே கனடாவிற்கு புலம் பெயர்ந்துள்ளனர். ஆனால் ஜனவரி 1 முதல் 7000 உக்ரேனிய அகதிகள் கனடாவிற்கு குடிபெயர்ந்துள்ளது ஆச்சரியமூட்டுவதாக ஆப்கானிய கனடிய திரைப்பட இயக்குனர் தெரிவித்துள்ளார்.