கனடாவை சீண்டிப்பார்க்கும் ரஷ்யா – கனடாவின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய விமானம்

canadian flight radar found russian aerofloat 111 flight

உக்ரைன் மீது இரக்கமின்றி தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யாவிற்கு கனடா மற்றும் அதன் நட்பு நாடுகள் பொருளாதார தடை உட்பட ரஷ்ய விமானங்களுக்கு தடைகளை அறிவித்துள்ளன. இந்நிலையில் ரஷ்ய விமான நிறுவனமான Aerofloat கடந்த ஞாயிற்றுக்கிழமை கனடாவின் தடையை மீறி உள்ளது.

கனடாவின் வான்வெளியை பயன்படுத்தி நாட்டிலிருந்து விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அத்து மீறியுள்ளதாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பதிலளிக்கும் வகையில் அதேநாளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கனடாவின் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் கூறினார்.

கனடிய வான்வெளியை பயன்படுத்தி இன்று Aerofloat 111 விமானம் கனடாவினால் அறிவிக்கப்பட்ட தடைகளை மீறியதை நாங்கள் அறிவோம் என்று போக்குவரத்து கனடா ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளது .

ரஷ்யாவிற்கும் கனடாவிற்கும் இடையே நேரடி விமானங்கள் எதுவும் கிடையாது. ஆனால் நாளொன்றிற்கு பல ரஷ்ய விமானங்கள் கனடிய வான்வெளி வழியாக மற்ற நாடுகளுக்கு பயணிக்கின்றன என்று போக்குவரத்து அமைச்சர் உமர் அல்கப்ராவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்

ரஷ்யாவின் அத்துமீறலை தொடர்ந்து கனடாவின் விமானச் சேவை வழங்குனரான NavCanada மற்றும் Aerofloat ஆகியவற்றின் நடவடிக்கைகள் குறித்து மறுஆய்வு செய்யப்போவதாக Transport Canada தெரிவித்துள்ளது .பிரிட்டனின் வான்வெளியில் Aerofloat பறப்பதற்கு பிரிட்டன் அரசாங்கம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ரஷ்யாவின் இரக்கமற்ற செயல்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரண்டு நாடுகளும் கைகோர்த்து உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி ஆகியோரின் மோசமான செயல்பாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டு நாடுகளும் கடுமையான தடைகளை விதித்துள்ளன