அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர்! கனடாவுக்குள் வரும் சர்வதேச பயணிகளுக்கு விதிக்கப்படும் கடும் கட்டுப்பாடு!

Justin Trudeau
Canada COVID-19

கனடாவுக்குள் வரும் சர்வதேச பயணிகள் விடுதிகளில் கட்டாயம் தானே தனிமைப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கை இந்த மாதம் 22 ஆம் தேதியிலிருந்து ஆரம்பமாகிறது.

இந்த அறிக்கையினை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் இன்று அறிவித்தார்.

மேலும் கனடாவிற்கு வந்த பின்னர் கட்டாயம் தனிமைப் படுத்துவதற்காக பயணிகள் அனைவரையும் சுமார் ஒன்பது விடுதிகளில் தங்க வைக்கப்படுவர் என்று அறிவித்துள்ளார்.

இத்தகைய புதிய விதிகளின் கீழ் கனடாவிற்குள் வருபவர்கள் தனது சொந்த செலவில் விமான நிலையத்திலேயே Covid-19 பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் பரிசோதனையின் முடிவுகள் கிடைக்கும் வரை முதல் மூன்று நாட்களுக்கு மேற்பார்வை இடப்பட்ட விடுதிகளில் செலவழிக்க வேண்டும்.

மூன்று நாட்களுக்கு தங்கும் செலவானது சுமார் 2,000 டாலர்கள் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தொகையினை செலுத்துவது பயணிகளின் பொறுப்பு எனவும் அறிவித்துள்ளார்.

கனடாவிற்கு வரும் பயணிகள் அனைவரும் பிப்ரவரி 18 முதல் அரசு அங்கீகரித்த விடுதிகளில் தங்குமிடத்திற்கு முன் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்க கூடிய நான்கு சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகாமையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போது மத்திய சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

எதிர்மறையான Covid-19 பரிசோதனை முடிவுகளை கொண்டவர்கள் மீதமுள்ள இரண்டு வாரங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்துதலை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாறாக நேர்மறையான சோதனை முடிவுகள் கொண்டவர்களாக இருந்தால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனிமைப்படுத்துதல் நிகழ்வுகளுக்கு அனுப்பப்படுவார்கள்.

இதையும் படியுங்க: கொரோனா தடுப்பூசி மருந்துகளை கனடாவின் அனைத்து மாகாணங்களுக்கும் விநியோகிப்பதில் மத்திய அரசாங்கம் தீவிரம்!