கனடாவில் கால் பதிப்பவர்கள் இந்த விதியை மீறினால் 880 டாலர்கள் அபராதமாக செலுத்த நேரிடும்!

Air-Canada
Returning to Canada

கனடாவின் டொரன்டோ நகரிலுள்ள பியர்சன் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெவ்வேறு நாடுகளிலிருந்து தினசரி பல்வேறு விமான பயணிகள் வருகை புரிந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் விமான பயணிகளுக்காக அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருக்கும் விடுதிகளில் மூன்று நாள் தனது சொந்த செலவிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளுதல் மேலும் சில கட்டுப்பாடுகள் விமானப் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கருதப்படுகிறது.

ஏனெனில் விமான பயணிகள் விடுதிகளில் தங்குவதற்கு மட்டுமே பல டாலர்களை செலவு செய்ய வேண்டியுள்ளதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அரசாங்க விதியை அத்து மீறும் நபர்களுக்கு ஒன்டாரியோ கட்டுப்பாட்டு விதிகளின்படி சுமார் 880 டாலர்கள் அபராதமாக செலுத்த நேரிடும் என்பதால் பயணிகள் அதிருப்தி நிலையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் கனடிய அரசாங்கம் இதற்கு ஒரு சிறந்த தீர்வு நிலையை கொடுக்க வேண்டும் என்றும் பன்னாட்டு விமான பயணிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் கனடாவின் பொது சுகாதார நலத்துறை விமான பயணிகளுக்கு கண்டிப்பான முறையில் பயணம் செய்த பின்பு, விடுதிகளில் மூன்று இரவு தனிமைப்படுத்திக் கொள்ளும் முறையை பின்பற்ற வேண்டும்.

அதன் பின்பு எதிர்மறையான சோதனை முடிவுகளை கொண்டவர்கள் மட்டும் தனது வீட்டிலேயே தன்னைத்தானே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

இந்த விதிமுறைகள் அனைத்தும் covid-19 சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உள்ளதால் சட்டத்தினை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.