61 வயதிலும் தொண்டு செய்வதற்காக பயணம் செய்யும் ரிக் – பி.சி முதல் ஒன்றாரியோ வரை

Canada
Toronto, Peel Region

ரிக் பால் என்ற நபர் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியிலிருந்து ஒன்டாரியோ வரை கடந்த மூன்றரை மாதங்களாக ஓடியுள்ளார். 61 வயது நிரம்பிய ரிக் புற்றுநோயாளிகளுக்கு உதவும் வகையில் நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு நாளும் ஓடியுள்ளார். தற்பொழுது தனது ஓட்டத்தை மூன்றரை மாதங்களுக்கு பின்னர் சால்ட்டு சென்மேரி பகுதியில் நிறைவு செய்துள்ளதாக சனிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“தொடக்கத்தில் இது என்னால் சாத்தியமாகுமா என்று மக்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இப்பொழுது நான் வெற்றிகரமாக இங்கே நிற்கிறேன் ” என்று ரிக் கூறினார்.

ரிக் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள தனது சொந்த நகரமான டன்கேனில் தனது பயணத்தை ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி தொடங்கினார். தனது ஓட்டத்தை சிறப்பாக நிறைவு செய்து தற்பொழுது சால்ட் ஸ்டேயில் உள்ள தனது இருப்பிடத்திற்கு வந்தடைந்தார்.

ரிக்-இன் தாயார் மற்றும் மருமகள் ஆகிய இருவரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். ரிக் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். தனது ஆசிரியர் வாழ்க்கை பயணத்தின்போது புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளை சந்தித்துள்ளதாக அவர் கூறினார்.

புற்றுநோயை முழுவதுமாக நீக்குவதற்கு நினைக்கவில்லை. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் அவர்களை எளிதாக வாழ வைக்கவும் முடியும் எனில் அதை ஏன் நிறைவேற்றக் கூடாது என்று அவர் கூறினார்.இதுவரை ரிக் 69 ஆயிரம் டாலர்கள் வரை நிதி திரட்டியுள்ளார்.

புற்றுநோய் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும், புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி உதவியின் மூலம் தொடர்ந்து ஆதரவளிக்க இருப்பதாகவும் கூறினார். தனது பயணத்திற்கு பிறகு சிறிது ஓய்வு எடுக்க விரும்புவதாக ரிக் கூறினார். ரிக் பயணம் குறித்து கனடாவின் மேக் எ விஷ் அமைப்பின் தலைவர் மெக்டனால்டு “இவரது திட்டங்கள் தனித்துவம் வாய்ந்ததாகவும் ஊக்கம் அளிப்பதாகவும் அமைகிறது ” என்று கூறினார்.