வாரத்திற்கு 2-4 மில்லியன் வரையிலான தடுப்பூசி மருந்துகள் -கனடாவின் அடுத்த இலக்கு!

corona
Canada Corona Vaccine

கனடா பைசர் பயோடெக் தடுப்பூசி மருந்துகளை இந்த வாரத்தில்ஏறத்தாழ 2 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது.

கனடாவின் பல்வேறு மாகாணங்களும் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

2 மில்லியன் தடுப்பூசி மருந்துகள் என்பது கப்பல் வெளியே வருவிக்க படும் தடுப்பூசி மருந்துகள் ஒரே வாரத்தில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கையாகும்.

மாடர்னா தடுப்பூசி மருந்துகள் கடந்த வாரத்தில் ஒரு மில்லியன் தடுப்பூசி மருந்துகள் கப்பல் வழியே வந்து அடைந்ததை குறித்து பைசர் தடுப்பூசி மருந்துகளும் இந்த எண்ணிக்கையில் கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் அடுத்த வாரம் வரை மாடர்னா தடுப்பூசி மருந்துகள் வரவழைப்பது குறித்து செயல்பாடுகள் எதுவும் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் கூட்டாட்சி அமைப்புகள் ஆனது அதிக அளவில் அஸ்திரா ஜெனிகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி மருந்துகள் பெற்றுக்கொள்ள இருப்பது குறித்து அறிவிப்பு வெளியிடாத போது மாடர்னா தடுப்பூசி மருந்துகளின் அடுத்த கப்பல் வழி வணிகம் தொடர்பான செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதிக அளவிலான பைசர் பயோடெக் தடுப்பூசி மருந்துகளானது பிரிட்டிஷ் கொலம்பியா, ஒன்டாரியோ மற்றும் கியூபெக் போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாரத்திற்கு 2 லிருந்து 4 மில்லியன் வரையிலான தடுப்பூசி மருந்துகளை பைசர் பயோடெக் நிறுவனம் ஜூன் மாதத்தில் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.