2022ஆம் ஆண்டு ஜனவரியில் ஓமிக்ரோன் மாறுபாட்டின் ஆதிக்கம் – ஒன்டாரியோ பொது சுகாதார அமைப்பு

covid-vaccine
canada covid-vaccine test

ஒன்டாரியோ மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரி வீரியம் மிக்க ஓமிக்ரோன் மாறுபாடு மாகாணத்தில் தீவிரமாக பரவி வருவதால் செவ்வாய்க்கிழமை பிற்பகல் செய்தி மாநாட்டை நடத்துகிறார். ஒன்டாரியோ மாகாணத்தின் சுகாதார அமைச்சரின் செய்தி தொடர்பாளர் வியாழக்கிழமை மருத்துவர் கீரன் மூர் திட்டமிடப்பட்ட மாநாட்டிற்கு கூடுதலாக பேசுவார் என்று தெரிவித்தார்.

ஒன்ராறியோவின் அறிவியல் ஆலோசனை அட்டவணை ,ஓமிக்ரோன் மாறுபாடு மாகாணம் முழுவதும் எவ்வளவு விரைவாக பரவுகிறது என்ற புதிய தரவுகளை வெளியிட்ட அடுத்த நாள் செய்தி மாநாடு வந்துள்ளது.

மாகாணம் முழுவதும் உள்ள அனைத்து புதிய வழக்குகளிலும் omicron மாறுபாடு ஏறத்தாழ 30 சதவீதமாக உள்ளது. ஒன்ராரியோ மாகாண சுகாதார அமைப்பு ஜனவரி மாதத் தொடக்கத்தில் ஒன்டாரியோவில் ஓமிக்ரோன் மாறுபாடு ஆதிக்கம் செலுத்தும் வைரஸ் தொற்றாக மாறும் என்று கணித்துள்ளது

Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான இரண்டாவது கட்ட தடுப்பூசி மருந்துகளை பெற்று 12 வாரங்களுக்கு பிறகு ஓமிக்ரோன் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறைய தொடங்கும் என்று இங்கிலாந்தின் தரவுகள் சுட்டிக் காட்டுவதாக அறிவியல் ஆலோசனை அட்டவணையின் தலைவர் பீட்டர் ஜூனி கூறினார்.

மாகாணத்திலுள்ள மருத்துவமனைகள் வெகுஜன நோய்த்தடுப்பு மையங்களை மீண்டும் இயக்குவதற்கு விரைவாக செயல்பட்டு வருவதாக ஒன்டாரியோ மருத்துவமனை சங்கம் திங்கள்கிழமை தெரிவித்தது.

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே மூன்றாவது தடுப்பூசி மருந்தான பூஸ்டர் தடுப்பூசி முன்பதிவு செய்ய தகுதியுடையவர்கள் என்று சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.