2022 ஆம் ஆண்டின் முதல் குழந்தையை பெற்றெடுத்த மருத்துவமனைகள் – பெற்றோர்கள் மகிழ்ச்சி

2022 newyear new born baby

2022 புத்தாண்டின் முதல் நாளில் வருடத்தின் முதல் குழந்தையை உலகிற்கு வரவேற்றதாக டொரன்டோ மருத்துவமனை அறிவித்தது.வருடத்தின் தொடக்கத்தில் சரியாக நள்ளிரவில் மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுக்கப்பட்டது .

ஹம்பர் ரிவர் மருத்துவமனையில் ஸ்ரேபியா மற்றும் சம்பாப் தம்பதிகள் தங்களது ஆண் குழந்தை மேவ்ரிக்கை சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் பெற்றெடுத்து உலகிற்கு வரவேற்றதாக மருத்துவமனை தெரிவித்தது.2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தை தங்களது சிறிய குழந்தையுடன் வரவேற்பதில் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவதாக மருத்துவமனை கூறியது.

கனடாவின் மிசிசாகாவில் அஞ்சலி மற்றும் ஜெரில் தம்பதியினருக்கு கிரெடிட் வேலி மருத்துவமனையில் ஒன்பது நிமிடங்களில் குழந்தை பிறந்தது. ஆண்டின் தொடக்கத்தில் தம்பதியினருக்கு பிறந்த நாதன் என்ற குழந்தை எட்டு பவுண்டுகள் நான்கு அவுன்ஸ் எடை கொண்டிருந்தது.

தாயும் குழந்தையும் நலமாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளனர் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக டிரில்லியம் ஹெல்த் பார்ட்னர்ஸ் அறிக்கையில் தெரிவித்தனர் .நாதனின் பெற்றோர் வருடத்தின் முதல் நாள் அருமையான உணர்வை தருவதாக தெரிவித்தனர்.

நார்த் யார்க் பொது மருத்துவமனை புத்தாண்டின் முதல் குழந்தையை சரியாக 12:36 மணி அளவில் பெற்றெடுத்ததாக தெரிவித்தது.சனிக்கிழமை காலை பெற்றோர் மற்றும் குழந்தையின் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்து குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது .

இவ்வாறு கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் உள்ள மருத்துவமனைகள் புத்தாண்டின் தொடக்கத்தில் பெற்றெடுத்த முதல் குழந்தையை பற்றிய செய்திகளை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.