2,000 டாலர்கள் வரை அபராதம் செலுத்த வேண்டி இருக்கும் -கனடா எல்லையை கடக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியது!

Hemb
indo canadian harpreet indian

கனடாவில் அரசாங்கத்திடம் முறையான அனுமதி பெறாமல் சரக்குகளுடன் எல்லையை கடப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது .

சட்டத்திற்கு புறம்பாக கனடாவின் எல்லை பகுதிகளில் கஞ்சா கடத்தப்படுவதாக தகவல்கள் வந்துள்ளது.

இதனை அடுத்து கனடாவின் எல்லைகளில் கஞ்சாவுடன் சட்டத்தை மீறி கடக்க முயன்றால் அபராதம் விதிக்கப்படும் என்று கனடாவின் எல்லை சேவைகள் தகவலை அறிவித்துள்ளது.

மேலும் அபராத தொகையானது 2,000 டாலர்கள் வரை செலுத்த வேண்டியது இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடா அரசாங்கத்திடம் எந்த ஒரு அறிவித்தலும் இன்றி எல்லையை கடக்கும் கஞ்சா அல்லது அதனுடைய தொடர்புடைய பொருள்கள் அனுமதிக்கப்பட்டால் அந்த செயல் தண்டனைக்குரிய குற்றவியல் குற்றமாக கருதப்படும் என்று அறிவித்துள்ளது.

எனவே எந்தவிதமான முன் அறிவித்தலும் இன்றி கஞ்சா அல்லது அதனுடன் தொடர்புடைய பொருட்களை கொண்டு பயணிக்கும் பயணிகள் சிறப்பு கவனத்தோடு எடுத்துச் செல்லுமாறு எச்சரிக்கையை தெரிவித்துள்ளது.

மேலும் இதனை மீறும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது கனடிய அரசாங்கம் கடும் நடவடிக்கையை எடுக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

கனடாவின் அனைத்து எல்லைகளிலும் சிறப்பு ஆராய்ச்சி படை மற்றும் பரிசோதனை குழு அமைக்கப்பட்டு அதிரடியாக கவனம் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

கனடாவின் எல்லையோர நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் கட்டுப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா அல்லது அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளை அரசாங்கத்திடம் முறையே அறிவித்த அனுமதி பெற்று எல்லையை கடக்க எல்லையோர சேவைகள் வலியுறுத்திக் கூறியுள்ளது