20 வயதுடைய இளைஞரின் உடல் கண்டுபிடிப்பு – மரணத்திற்கான காரணம்

toronto zoo
fire zoo

டொரன்டோ உயிரியல் பூங்காவிற்கு அருகில் காவல்துறையினரால் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை அதிகாலை பூங்கா அருகே சடலத்தை மீட்டு எடுத்து உள்ளனர். உயிரிழந்தவர் 20 வயது நிறைவு பெற்ற இளைஞர் என்று காவல்துறை தெரிவித்தது.

ஸ்காபரோவில் உள்ள பழைய பின்ச் அவென்யூ பகுதிக்கு அருகே உள்ள ரீசர் சாலைக்கு நள்ளிரவு மீட்புக்குழுவினர் அழைக்கப்பட்டனர். பூங்கா அருகே தீப்பிடித்து எரிவதாக குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்ற போது இறந்த நிலையில் இளைஞர் உடலை கண்டெடுத்தனர்.

பூங்காவிற்கு அருகே தீப்பற்றி எரிந்ததற்கு காரணமாக எது அமைந்தது மற்றும் இறந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்ட சடலத்திற்கு என்ன தொடர்பு ? போன்ற அனைத்தையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். புலனாய்வாளர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கொலை பிரிவு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இறந்தவரின் உடல் செவ்வாய்க்கிழமை அன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

இறந்தவர் பிராம்டன் குடியிருப்பாளர் என்று புலனாய்வாளர்கள் புதன்கிழமை அன்று தெரிவித்தனர். அவரது பெயர் ரொனால்டோ என்று கூறினர். ரொனால்டோவின் மரணத்திற்கு காரணம் என்னவென்று கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவருக்கு தெரிந்த அல்லது சமீபத்தில் அவரோடு தொடர்பு கொண்ட எவரும் புலனாய்வாளர்களை 416-808-7400 என்ற எண்ணிற்கு அழைத்து தொடர்பு கொள்ளவும் என்று வலியுறுத்தியுள்ளனர். இல்லையெனில் crime stoppers-ஐ அணுகலாம் என்று தெரிவித்துள்ளனர்.