ஒன்ராறியோவில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து கதறிய பணியாளர்கள்!

collapse in London
2 dead, 4 injured after building collapse in London

கனடாவில் ஒன்றாரியோ மாகாணம் இலண்டன் நகரில் திடீரென பயங்கர சத்தம் கேட்டது. பயங்கர சத்தத்தால் வீடுகளிலிருந்து வெளியே வந்த பொதுமக்கள் சிலர், கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஒன்றாரியோ மாகாணத்தில் லண்டன் நகரில் வசிக்கும் Elizabeth Rutherford, இந்த சம்பவத்தை நேரில் பார்த்த தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், பயங்கர சத்தம் ஒன்று கேட்டு திடுக்கிட்டதாக தெரிவிக்கிறார். மக்கள் அலறுவதைக் கேட்டு ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.

அங்கு கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த ஒரு நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதையும், பணியாளர்கள் அலறியபடி அங்கும் இங்கும் ஓடுவதையும் கண்டு திடுக்கிட்டார்.

இந்த துயர சம்பவத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர். நான்கு பேர்  காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

40 பேர் பணி செய்த அந்த கட்டிடத்தில், மற்றவர்கள் ஆபத்தில் இருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படியுங்க: கனடாவில் இனவெறித்தாக்குதல்! தப்பி ஓடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி?

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.