கனடாவின் டொரண்டோவில் பாதைகளில் உள்ள பனியை அகற்ற $17 M செலவு – புயலினால் எதிர்கொள்ள வேண்டியிருந்த சவால்கள்

snowfall
File photo. THE CANADIAN PRESS/ Tijana Martin Leave A Comment

கனடாவின் டொரண்டோவில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு மற்றும் புயல் காரணமாக 15 மணி நேரத்தில் 55 சென்டிமீட்டர் அளவிற்கு நகரம் முழுவதும் பனி விழுந்துள்ளது. நகரம் முழுவதும் ஆக்கிரமித்துள்ள பனியை அகற்ற திட்டமிடப்பட்ட பட்ஜெட்டை விட அதிக அளவு செலவாகும் என்று ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வருடாந்திர குளிர்கால பட்ஜெட்டில் 20% அதிகம் செலவாகும் என்று இந்த மாத அறிக்கை வெளியிடப்பட்டது. நகரத்திற்கு $17 மில்லியன் டாலர்களுக்கும் மேல் செலவாகும் என்று கூறப்படுகிறது.

2022 ஆம் ஆண்டின் பனிப்பொழிவிற்க்கு பிந்தைய செயல்பாட்டு அறிக்கை நகர போக்குவரத்து சேவைகளின் பொது மேலாளரால் எழுதப்பட்டது. ஜனவரி மாத நடுப்பகுதியில் ஏற்பட்ட புயலில் குவிந்த பனி ,தொடர்ந்து வந்த வாரங்களில் ஏற்பட்ட குளிர்ச்சியான சூழ்நிலைகளுடன் இணைந்து தனித்துவமான தொகுப்புகளை உருவாக்கின.

சாலைகளில் உள்ள பனி குவியல்கள் அகற்றும் பணியை கடுமையாக்கி உள்ளது. இதுவரை 1,80000 டன் பனிகள் அகற்றப்பட்டுள்ளன .$17 மில்லியனுக்கும் அதிகமான செலவில் சாலைகள்,தெருக்கள் மற்றும் நடைபாதைகள் சுத்தம் செய்யப்பட்டன.

பனிப் புயலின் விளைவாக கூடுதல் சவால்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது.அவசரகால சேவைகளின் உடனடித் தேவைகளை வழங்குதல், உபகரணங்களில் சிரமம் ,பொருட் சேதங்களை தவிர்க்க கைகளால் சுத்தம் செய்தல் போன்ற பல சவால்களை சந்திக்க நேர்ந்தது.