கனடாவில் முதல் முறையாக நிகழ்த்தப்பட்ட சாதனை! கிழக்கு டொராண்டோ பொது நல சுகாதார மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

vaccine
Canada recommends vaccine

கனடாவில் அனைத்து மாகாணங்களிலும் Covid-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் தடுப்பூசி மருந்து வினியோகம் விரிவாக்கம் செய்யப்பட்டு விரைந்து தடுப்பூசிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

கனடாவிலுள்ள ஈஸ்ட் யோர்க் பகுதியில் அமைந்துள்ள தடுப்பூசி மையத்தில் 24 மணி நேரத்தில் 10,000 பேருக்கு தடுப்பூசி மருந்துகளை செலுத்தி சாதனை படைத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈஸ்ட் யோக் மையத்திலுள்ள தான்கிளிபே பார்க் கம்யூனிட்டி அமைப்பில் , கிழக்கு ரொரன்ரோ பொது நல சுகாதார பங்கேற்பாளர்கள் இந்த தடுப்பூசி மையத்தை நடத்தி வந்துள்ளனர். ஒரே நாளில் பத்தாயிரம் பேருக்கு Covid-19 தடுப்பூசி மருந்தை செலுத்தி சாதனை படைத்துள்ளனர்.

மேலும் இந்த தடுப்பூசி செலுத்தும் சாதனையானது கனடாவிலேயே முதல்முறையாக நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்த தடுப்பூசி மருந்து செலுத்தும் மையத்தில் பைசர் தடுப்பூசி மருந்து விநியோகிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் இந்த தடுப்பூசி மையத்தில் பலரும் வரிசையில் நின்று காத்திருந்து தடுப்பூசி மருந்து போட்டுக் கொண்டதாக கூறுகின்றனர்.

அதிலும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் பொறுமையாக காத்திருந்து முறையே தடுப்பூசி மருந்தை செலுத்தி கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி மருந்து செலுத்துதல் என்பது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து காத்திருந்து செலுத்திக் கொண்டது முக்கிய காரணமாகும் என்றும் கருதுகின்றனர்.

இதேபோல் மாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் முறையே வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொண்டால் விரைவாக தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடையும் என்றும் எதர்பார்க்கப்படுகிறது.