Covid-19 தொற்றினால் 10000 உயிரிழப்புகள் – மைல்கல்லை எட்டியதாக சுகாதார அமைப்பு அறிவிப்பு

COVID-19
Canada surpasses 15,000 deaths related to COVID-19

கனடாவில் COVID-19 வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு எடுத்து வருகின்ற நிலையில் வீரியமிக்க OMICRON மாறுபாடு தலைநகர் ஒட்டாவாவில் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது கனடியர்கள் இடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஒன்டாரியோ மாகாணத்தில் புதிதாக 700 பேருக்கு covid-19 வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Covid-19 வைரஸ் தொற்று பாதிப்பினால் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன. Covid-19 வைரஸ் தொடர்பான இறப்புகள் ஒன்ராறியோ மாகாணத்தில் 10000-ஐ எட்டியது. திங்கள் கிழமை 788 பேர் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். செவ்வாயன்று 687 covid-19 வழக்குகள் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Covid-19 தடுப்பூசி மருந்துகளின் விகிதங்கள் அதிகரித்ததன் விளைவாக மாகாணத்தில் தொற்று தொடர்பான இறப்புகளின் விகிதத்தில் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களில் இறப்பு எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பினும் நவம்பர் 30-ஆம் தேதி இறப்பு விகிதத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 21476 covid-19 பரிசோதனைகள் செயல் படுத்தப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகளில் 3% நேர்மறை விகிதங்கள் என்று மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது ஒண்டாரியோ மாகாணத்தில் செயலில் உள்ள covid-19 வழக்குகளின் எண்ணிக்கை 6940 ஆக உள்ளது.

153 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் covid-19 தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் தினசரி கோவிட் 19 வழக்குகள் பதிவாகி வருகின்றன