Woodbine : கனடாவில் படகு பாறையின் மீது மோதியதில் தமிழர் உயிரிழப்பு! காயமடைந்த 6 பேரும் தமிழர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது!

Woodbine
One person has been rushed to hospital in critical condition following a boat crash at Woodbine Beach

கனடாவில் டொராண்டோ Woodbine கடற்கரையில் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு படகு பாறைகளில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டொராண்டோ காவல் துறையினர்  “மதியம் 12:30 மணியளவில், 46 வயதான ஒருவர் 20 அடி பவுரைடர் கப்பலை ஆறு பயணிகளுடன் ஓட்டிக்கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கரையிலிருந்து 90 மீட்டர் தொலைவில் உள்ள பாறைகளில் மோதியுள்ளார்” என்று கூறினர்.

பயணிகளில் ஒருவரான 47 வயது நபர் உயிருக்கு ஆபத்தான காயம் அடைந்து மருத்துவனைக்கு  கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இறந்தவர் இலங்கை யாழ்பாணம் வல்வெட்டித்துறை தீருவிலையைச் சேர்ந்த 46 வயதான இலங்கைகோண் பல்லவநம்பி என்று தெரிய வந்துள்ளது.

படகில் பயணித்த மற்ற பயணிகளும் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளானார்கள். இவர்களில் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் 3 பேர் சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றனர். படகில் பயணித்த அனைவரும் தமிழர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து ஏற்படுவதற்கு முன்னர் குறித்த படகு அதிவேகமாக பயணித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து டொராண்டோ காவல்துறையின் போக்குவரத்து சேவைகள் பிரிவும் கடல் பிரிவும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிபி 24 ஊடகத்தால் வெளியிடப்பட்ட ஒரு குறுகிய வீடியோவில், படகு விபத்துக்குள்ளாகும் முன் எவ்வளவு வேகமாக சென்று கொண்டிருந்தது என்பதைக் காட்டுகிறது.

விபத்துக்கு முன்னர் படகு அதிக வேகத்தில் பயணிப்பதைப் பார்த்த சம்பவ இடத்திலுள்ள சாட்சிகளும் தெரிவித்தனர்.

அந்த நேரத்தில் படகுகளில் யாராவது லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்திருந்தார்களா என்பது தெளிவாக இல்லை. சிலர் படகில் இருந்து தூக்கி எறியப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்க: UNICEF : மொத்த செயல்பாடும் மோசம்! குழந்தைகள் நலனில் பெரும் பின்னடவை சந்தித்த கனடா!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.