தமிழர் கைதுக்கு கனடாவில் மேயர்கள் கண்டனம் – தமிழினத்துக்கு ஆதரவாக ஒலிக்கும் குரல்!

john-tory
Toronto residents who are desperately hoping

இலங்கை யாழ் மாவட்ட மேயர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள நிலையில், கனடாவில் டொரன்டோ மேயர் ஜான் டோரி மற்றும் பிராம்டன் மேயர் பாற்றிக் பிரவுன் ஆகியோர் கைது நடவடிக்கையை எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ரொறன்ரோ மேயர் ஜான் டோரி இது குறித்து பேசுகையில், யாழ் மேயர் மணிவண்ணனை கைது செய்ததை எதிர்த்து கடுமையான கண்டனம் தெரிவிக்கிறேன் என்றும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

யாழ் மாவட்ட மேயர் மணிவண்ணன் தமிழன் ஆவார். எனவே, தமிழர்களை இவ்வாறு நடத்தப்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும் இதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிராம்டன் மேயர் பாட்ரிக் பிரவுன் தனது கருத்தினை ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார்.

அதில் “ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை பற்றிய விசாரணைகளை நடத்துமாறு வலியுறுத்தும் நடவடிக்கைகளுக்கு பழிவாங்கும் எண்ணத்தில் அரசாங்கம் செயல்படுகிறது.

மேலும் அங்குள்ள அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் ,மற்றும் இனப்படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அரசாங்கத்தின் இச்செயல் முழுமையாக தவறானதாகும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது ” என்று கருத்தினை பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.

யாழ் மாவட்ட மேயர் மணிவண்ணன் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழன் என்பதால் தமிழர்கள் அனைவரும் இதனை எதிர்த்து கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.