கனடாவில் வெப்ப அலையை எதிர்கொள்ளப்போகும் பகுதிகள்.? பொதுமக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!

summer canada
canada summer

மத்திய கனடா பகுதியில் வாழும் மக்கள், இந்த வார இறுதியை வெப்ப அலையுடன் கடக்க வேண்டியிருக்கும் என்று கனடா சுற்றுச்சூழல் அமைச்சகம் பொதுமக்களை எச்சரிக்கிறது.

தெற்கு மானிடோபா மற்றும் ஒன்றாரியோவின் பெரும்பகுதிக்கு வெப்ப எச்சரிக்கை அறிவிப்பை சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இனி வரும் ஏழு நாட்களுக்கு  வெப்பநிலை 30 டிகிரிக்கு மேல் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

டொராண்டோவை பொறுத்தவரையில், இரவில் வெப்பநிலை குறைந்தது 20 டிகிரி வரை செல்லக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு அல்பர்ட்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய பகுதிகள்  மழை மற்றும் இடியுடன் கூடிய வானிலையை எதிர்கொள்கிறது.

டொராண்டோவில், வார இறுதியில் வெப்பநிலை 35 டிகிரியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நகரம் வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் 15 அவசர குளிரூட்டும் மையங்களைத் திறந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms