நொடியில் மாறிய வாழ்க்கை – கனடாவில் சமையலறைவிட்டு வெளியேறும் போது, பணக்காரியான பிரிட்டீஷ் கொலம்பியா பெண்!

squamish-mom-wins-1-million-in-lotto
Ashleigh Preston. Photo: COURTESY BCLC

கனடாவில் பிரிட்டீஷ் கொலம்பியா மாகாணத்தில் லாட்டரியில் $1 மில்லியன் பரிசை வென்றுள்ள பெண் அது தொடர்பாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரிட்டீஷ் கொலம்பியாவின் Squamish பகுதியை சேர்ந்தவர் Ashleigh Preston என்ற பெண்மணி. இவருக்கு தான் லாட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

இது குறித்து பேசிய Ashleigh, லோட்டோ மேக்ஸ் லாட்டரியில் தான் எனக்கு இந்த பரிசு விழுந்துள்ளது.

பரிசு விழுந்த தகவலை உறுதி செய்த போது, நான் வீட்டு சமையலறையில் இருந்தேன். எனக்கு ஜாக்பாட் அடித்தது உறுதியான மகிழ்ச்சியில் அதிக சத்தத்துடன் பலமாக கத்தினேன்.

அந்த நேரத்தில், என் கணவர் மற்றும் குழந்தைகள் வேறு அறையில் இருந்த நிலையில் நான் கத்துவதை பார்த்து, என்னவோ ஏதோ என்ற பயத்தில் பதறினார்கள்.

நான் சமையலறையில் இருந்ததால் என் விரல்களை கத்தியால் வெட்டி கொண்டு அந்த வலியில் கத்துவதாக என்னுடைய குழந்தைகள் பயந்தனர்.

என்னை நோக்கி அவர்கள் வேகமாக ஓடி வந்த பின்னரே லாட்டரியில் பரிசு விழுந்த தகவலை அவர்களிடம் கூறினேன்.

எனக்கு அதிர்ஷ்டம் அடித்ததை அறிந்து எங்கள் குடும்பத்தினர் அனைவரும் இன்ப அதிர்ச்சியில் திகைத்து நின்றனர்.

மேலும் அங்கிருந்த என் தாயாரும், “ஓ மை கடவுளே” என்று கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்” என கூறியுள்ளார்.

லாட்டரியில் விழுந்த பரிசு பணத்தை சேமிக்க முடிவு செய்துள்ளதாக Ashleigh கூறிய போதிலும்,  தனது கனவு சொகுசு காரை வாங்கவும் திட்டமிட்டுள்ளார். கனடா லாட்டரியில் இது போல சில எதிர்பாரா சம்பவங்கள் அவ்வப்போது நிகழும்.

இதையும் படியுங்க: ஒன்ராறியோவில் ஐ.சி.யுவில் கொரோனா  நோயாளிகளின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.