கனடாவில் ஒன்ராறியோவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம்!

ontario
Some employees could make up to an extra $100 per week.

கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள சில கடைகள், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் ஊதியம் வழங்க முடிவு செய்துள்ளன.

போனஸ் தொகையின் மதிப்பு சில நூற்றுக்கணக்கான டாலர்கள் இருக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

கொரோனா தொற்று நோய்களின் போது பணியாற்றிய ஊழியர்கள் தங்கள் சேவைக்கான அங்கீகாரமாக போனசைப் பெறுவார்கள் என்று சோபிஸ், வால்மார்ட் மற்றும் டொலராமா நிறுவனங்கள் சமீபத்தில் அறிவித்தன.

அனைத்து முழுநேர கனேடிய ஊழியர்களுக்கும் 250 டாலர் போனஸ் பெற உள்ளனர். அதே போல பகுதிநேர தொழிலாளர்கள் 150 டாலர் பெறுவார்கள் என்று வால்மார்ட் நிறுவனம் அறிவித்தது.

கனடா முழுவதும் பணியாளர்களை தக்கவைத்துக் கொள்ள 300 டாலர் வரை மதிப்புள்ள போனஸ் தொகை ஒருமுறை வழங்கப்போவதாக டோலராமா நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் அறிவித்தது.

ஒன்றாரியோ மற்றும் மனிடோபாவின் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு வாரத்திற்கு 10 முதல் 100 டாலர் வரையில் கூடுதல் மதிப்புள்ள தற்காலிகப் பொதுமுடக்க போனசை அறிமுகப்படுத்தியது சோபிஸ் நிறுவனம்.

பொது முடக்க போனஸ் சேஃப்வே, ஃப்ரெஷ்கோ மற்றும் ஃபுட்லேண்ட் உள்ளிட்ட பிற கடைகளிலும் வழங்கப்படும்.

லோப்லாஸ், சோபீஸ் மற்றும் வால்மார்ட் போன்ற பல வணிகங்கள் தொற்றுநோய்களிலும் போனசை முன்னரே செயல்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க: ஒன்ராறியோவில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து கதறிய பணியாளர்கள்!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.