கனடாவில் சிறு வணிக உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் அரசின் அறிவிப்பு!

Ontario Small Business
Ontario Building On Supports for Employers During COVID-19

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு பிறகு, டிசம்பர் 26 முதல் கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் பொது முடக்கம் மீண்டும் தொடங்குகிறது.

பொதுமுடக்கம் முழு மாகாணத்தையும் குறைந்த பட்சம் 14 நாட்களுக்கு முடக்கிவிடும் என்று திங்கட்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டு அறிவித்ததார்.

இந்த அறிவிப்பு, ஒன்றாரியோவின் சிறு வணிகங்களுக்கு மிகக் கடினமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, ஒரு புதிய மானியம் திட்டம் விரைவில் அறிவிக்கப்பட்டு, கூடுதல் நிதி உதவியை ஒன்றாரியோ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ சிறு வணிகர்களுக்கு ஆதரவளிக்கும் இந்த  மானியம், சில சிறு வணிக உரிமையாளர்களுக்கு மானியமாகக் குறைந்தபட்சம் 10,000 டாலர் முதல் அதிகபட்சம்  20,000  டாலர் வரை வழங்கும்.

இந்த மானியம் பெற தகுதியான விண்ணப்பதாரர்கள், மாகாண அளவிலான பொது முடக்கத்தின் காரணமாகச் சேவைகளை மூட அல்லது கணிசமாக கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

திறந்த நிலையில் இருக்கும் அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய வணிகம் மேற்கொள்ளும் சிறு வணிக உரிமையாளர்கள் இதற்கு தகுதியற்றவர்கள்.

அவர்கள் நிறுவன மட்டத்தில் 100க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் ஏப்ரல் 2019 உடன் ஒப்பிடும்போது ஏப்ரல் 2020 இல் குறைந்தபட்சம் 20% வருவாய் சரிவை சந்தித்திருக்க வேண்டும்.

2020 வசந்த காலத்தில் பொது சுகாதார நடவடிக்கைகளின் தாக்கத்தை இது பிரதிபலிப்பதால் இந்தக் காலம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று அரசாங்கத்தின் அறிக்கை கூறுகிறது.

இந்த மானியத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்த விவரங்கள் ஜனவரி 2021க்கு பின்னரே கிடைக்கும்.

இதையும் படியுங்க: ராணுவ கொடுமைகளை எதிர்த்த பெண் ஆர்வலர் கனடாவில் மர்ம மரணம்!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.