ஊரடங்கில் மொடாக்குடிகாரர்களான கனேடியர்கள்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

alcohol
Junk Food and alcohol consumption surged in canada

ஊரடங்கு காலத்தில் கனடா மக்கள், ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளை அதிக அளவு உணவாக எடுத்துக்கொண்டதோடு, மது (alcohol )மற்றும் புகைப்பழக்கம் வழக்கத்தை விட அதிகரித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

கனடாவில், பல மாகாணங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக அசாதாரண சுகாதாரச் சூழல் நிலவிவரும் வேளையில்,  அரசாங்கம் ஆய்வு ஒன்றை நடத்தியது.

அதில் கனேடிய மக்கள் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளை அதிக அளவு உணவாக எடுத்துக்கொள்வதாகவும், மது மற்றும் புகைப்பழக்கம் வழக்கத்தைவிட அதிகரித்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிராக, கனடா முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

இதனால் அவர்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களில் முக்கியமானது, பொழுதுபோக்குக்கு உண்ணும் ஆரோக்கியத்துக்கு எதிரான நொறுக்குத் தீனிகள், மற்றும் மது, புகைப்பழக்கம்.

இவை யாவும் வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கனடாவின் தலைமைப் பொது சுகாதார அதிகாரி நாட்டு மக்களை ஆரோக்கியமான உணவுத் தேர்வுக்குத் திரும்புமாறு வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஒரு மாத காலத்தில், ஆரோக்கியம் இல்லாத நொறுக்குத் தீனிகள் மற்றும் இனிப்பு வகைகளின் நுகர்வு கணிசமான அளவு அதிகரித்துள்ளது குறித்து, ஸ்டேட்கான் என்ற அமைப்பு, புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, முன்பு நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளோடு ஒப்பிடும்போது, ஆரோக்கியமில்லாத நொறுக்குத் தீனிகளை உண்பவர்கள் இப்போது 35% அதிகரித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இது மது, புகைப் பழக்கத்துக்கும் பொருந்தும். 5 கனடா மக்களில் 1 என்ற விகிதத்தில் அளவுக்கு அதிகமான மது அருந்தும் பழக்கம் அதிகரித்துள்ளதாகவும்,
புகைப்பழக்கம் 3 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: கனடாவில் மிசிசாகா பகுதியில் பல வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோரவிபத்து!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.