கனடா வங்கி எச்சரிக்கை – நாட்டின் பொருளாதாரத்தில் பணவீக்கம் அதிகரிப்பு

Bank of Canada
Bank of Canada will hold current level of policy rate until inflation objective is achieved, continues quantitative easing
கனடாவில் பணவீக்கத்திற்கு காரணம் :

கனடாவில் covid-19 வைரஸ் தொற்று காரணமாக வணிகம், கல்வி போன்ற பல்வேறு துறைகளும் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு ஊரடங்கு அமலில் இருந்தது. நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.நாட்டில் செலவினங்கள் அதிகமாக இருப்பதால் பணவீக்கம் அதிவேகமாக ஏற்படுகிறது.

கடந்த ஆண்டு பொருளாதாரத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டும் நுகர்வோரின் விலைகள் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை Statistics Canada இன்று காலை அறிவிக்கும்.

நாட்டின் பணவீக்கம் அளவுகோலில் 3.6 சதவீதம் ஜூன் மாதத்தில் உயர்ந்துள்ளது. மே மாதத்தின் புள்ளிவிவரம் ஒரு தசாப்தத்தில் மிகப்பெரிய வருடாந்திர அதிகரிப்பு ஆகும். செலவினம் மற்றும் பணவீக்கம் போன்றவற்றின் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

நாட்டு மக்களும் பொருளாதாரமும் :

ஜூலை மாதத்தில் நுகர்வோர் விலைகளின் குறியீட்டில் 3.4 சதவீதம் அதிகரிக்கும் என்று RBC பொருளாதாரம் கணித்துள்ளது .ஆனால் பெரும்பாலும் அடிப்படை ஆண்டுகளின் பொருளாதார விளைவாக, இந்த ஆண்டு பணவீக்கத்தின் மதிப்பானது 3 சதவீதத்தை அடையும் என்று கனடா வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆளுநர் டிப் மெக்லம் , விலை உயர்வுகள் தொடர்ந்து கொண்டே இருந்தால் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடாவின் மத்திய வங்கி மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார்

. விலைவாசி உயர்வு, பண வீக்கம் போன்றவற்றால் நாட்டில் வாழும் நடுத்தர வர்க்கத்தினர் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். எனவே, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு கனடாவின் பொருளாதார அமைப்பு அடுத்தகட்ட நடவடிக்கைகளை செயல்படுத்த முனைப்புடன் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன