2022 ஆம் ஆண்டில் தொடங்கி கனடா மக்கள் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்!

Greenhouse
Greenhouse Effect Canada

கனடாவில் எரிவாயு விலைகள் உயரக்கூடும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து, கனடா எரிசக்தி நிபுணர் ஒருவர் கூறுகையில், பசுமை இல்ல வாயு உமிழ்வு வரியை 2022 ஆம் ஆண்டில் டன்னுக்கு 50 டாலராக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் டன்னுக்கு 15 டாலர் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

கனடாவில் மலிவான ஆற்றலுக்கான ஆதரவாளர் குழு எனப்படும் கனடாவின் மலிவு எரிசக்தி அமைப்பின் தலைவரான டான் மெக்டீக் கருத்துப்படி, ஒன்றாரியோவில் எரிவாயு விலை 2030 ஆம் ஆண்டுக்குள், பல மடங்கு அதிக விலை கொண்டதாக மாறும்.

இந்த விலை மாற்றம் மாகாணம் முழுவதையும் கடுமையாக பாதிக்கும் என்று மெக்டீக் கூறுகிறார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த மாற்றத்தை டிசம்பர் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து பிரதமர் உடனடியாக கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.

இருந்தாலும், பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைக்க இது உதவும் என்று கூறி ட்ரூடோ தனது திட்டத்தின் பக்கம் உள்ள  நியாயத்தை தெளிவு படுத்தினார்.

2030 ஆம் ஆண்டுக்குள் 2005 நிலைகளின் கீழ், பசுமை இல்ல வாயு உமிழ்வை 30 % குறைக்க கனடா உறுதி பூண்டுள்ளது.

பசுமைக்குடில் வாயுக்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்த போது அவை நமக்கு நன்மையளித்தன.

இப்போது, நமது வாழ்க்கை முறைகளின் மூலம் இவற்றின் அளவு பெருமளவு அதிகரித்ததே உலகம் வெப்பமயமானதற்கு காரணம்.

பருவ நிலை மாற்றத்திற்கு முக்கிய காரணியாக விளங்கும் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐநா தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்க: கனடாவில் ஒன்ராறியோவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம்!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.