வேலை இழந்த கனேடிய மக்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை! விண்ணப்பிக்க வேண்டிய தகுதி.?

CRB
Canada Recovery Sickness Benefit -CRSB

கொரோனா பெரும் தொற்றின்  காரணமாக வேலை இழந்த கனடியர்கள் மத்திய அரசிடமிருந்து புதிய நிதி உதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Ontario மற்றும் Quebec மாகாணங்களில் தொடரும் தொற்றின் அதிகரிப்புக்கு மத்தியில் வேலை இழப்புகளும் அதிகரிப்பது குறித்த கவலைகளுக்கு மத்தியில் அரசாங்கத்தின் புதிய நிதி உதவிகள் நடைமுறைக்கு வருகின்றன.

Canada Recovery Benefit (CRB)

26 வாரங்களுக்கு வாரத்திற்கு  500 டாலர் செலுத்தும் Canada Recovery Benefit (CRB) விண்ணப்பங்களை Canada Revenue Agency ஊடாக  பூர்த்தி செய்யலாம்.

சுய தொழில் புரிவோர் அல்லது வேலைக் காப்புறுதிக்குத் தகுதி பெறாத, ஆனால் வருமான உதவி தேவைப்படுவோருக்கு வாரமொன்றுக்கு 500 டாலர்  வீதம் 26 வாரங்கள் வரை வழங்குகின்றது Canada Recovery Benefit – CRB திட்டம்.

இந்தக் கொடுப்பனவு, COVID காரணமாக வேலைக்குத் திரும்பாத அல்லது வருமானம் குறைந்தது 50 சதவீதம் குறைவடைந்த கனடியர்களுக்குக் கிடைக்கும்.

இந்தப் பணியாளர்கள் பணிக்குத் திரும்புவதற்கு தயாராக இருப்பதுடன், வேலை தேடும் முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும். அத்துடன், நியாயமான வேலையை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

Canada Recovery Caregiving Benefit – CRCB

COVID தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பதற்காக வேலையைத் தவறவிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கும்,

ஏனையவர்களுக்கும் கூடுதல் உதவிய வழங்கும், ஒரு புதிய பராமரிப்பாளர் நன்மைத் திட்டமும்  இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.

குடும்ப உறுப்பினர் ஒருவரைப் பராமரிப்பதற்காக வேலைக்குச் செல்ல முடியாதிருப்போரில் தகுதி பெறும் கனடியர்களுக்கு, வீடொன்றுக்கு வாரமொன்றுக்கு 500 டாலர் வீதம் 26 வாரங்கள் வரை வழங்கும் Canada Recovery Caregiving Benefit – CRCB  பெறலாம்.

Canada Recovery Sickness Benefit -CRSB

COVID தொற்று காரணமாக சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டிய அல்லது  வேலை செய்ய முடியாதவர்களுக்கு வாரமொன்றுக்கு 500 டாலர் வீதம் இரண்டு வாரங்கள் வரை வழங்கும்.

சுகவீனமுற்ற அல்லது COVID தொடர்புடைய காரணங்களுக்காக சுய தன்மைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டிய பணியாளர்களுக்கு வாரமொன்றுக்கு 500 டாலர் வீதம் இரண்டு வாரங்கள் வரை Canada Recovery Sickness Benefit -CRSB திட்டம்  வழங்கும்.

தகுதிபெறும்  கனடியர்கள்  CRB, CRSB, CRCB ஆகிய கொடுப்பனவுகளுக்கு September 25, 2021 வரையான ஒரு வருட காலத்திற்கு விண்ணப்பிக்கலாம்.