கனடா பொருளாதாரம் மிக மோசமான நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது!

personal debt
Canada

கனடாவில் கரோனா வைரஸ் பாதிப்பினால் சில மாகாணங்களில் ஊரடங்கு நீட்டிக்க பட்டிருக்கிறது.

தொற்று பரவலின் காரணமாக கனடா முழுவதும் வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பொழுதுபோக்கு போக்குவரத்து மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும் ஏறத்தாள 10 மாதங்களாக கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இதன் காரணத்தால் கனடிய மக்கள் வேலை இழப்பு மற்றும் பொருளாதார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கனடிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக நேற்றைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2020 ஆம் ஆண்டு இறுதியில் உள்ள மூன்று மாதங்களில் கனேடிய பொருளாதாரம் மோசமான வீழ்ச்சியை அடைந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த மூன்று மாதங்களில் 9.6 சதவீதம் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவில் ஒரு ஆண்டிற்கு 40.6 சதவீதமாக மொத்த பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் நவம்பர் மாதத்தில் 0.8% பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டதாகவும் இருப்பினும் அடுத்த மாதமான டிசம்பரில் 0.1% மட்டுமே பொருளாதார வளர்ச்சி வீதம் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதன் அடிப்படையிலேயே கரோனா வைரஸ் தொற்று காலத்தில் கனடாவின் பொருளாதாரம் மிக மோசமான நிலையை நெருங்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.