அவசரகால உத்தரவால் வெளிவந்த டொராண்டோ Adamson BBQ நிறுவனத்தின் மோசடி!

Adamson BBQ

கொரோனா பெருந்தொற்றால் அமலில் உள்ள, அவசர கால உத்தரவுகளை மீறியதை தொடர்ந்து,  டொராண்டோ லீசைடில் உள்ள Adamson BBQ அமைந்துள்ள இடம் இதுவரையில் பிரதான வணிக உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

டொராண்டோ ஸ்டார் ஊடகம் தெரிவித்த தகவலில், அந்த இடத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக முறையற்ற வகையில் Adamson BBQ இயங்கி வருகிறது.

ஆனால், ஆடம்சன் பார்பிக்யூவின் உரிமையாளரான ஆடம் ஸ்கெல்லி இதற்காக வெறும் $ 800 அபராதம் மட்டுமே செலுத்தியதாக தெரிய வருகிறது.

இது ஐந்து ஆண்டுகளுக்கு உரிமத்தைப் பெறுவதற்கும் புதுப்பிப்பதற்கும் ஆகும் செலவை விடக் குறைவானதாகும்.

பொதுவாக  வணிக உரிமம் இல்லாமல் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு அதிகபட்சமாக $ 25,000 அபராதம் விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஐந்து வருடங்களுக்கு உரிமத்தைப் பெறுவதற்கும் புதுப்பிப்பதற்கும் சுமார் $ 1,750 செலவாகும்.

ஆனால் Adamson BBQ உரிமையாளர் ஸ்கெல்லி $ 200 மற்றும் $ 100 என இரு முறை அபராதம் செலுத்தி உள்ளார். பிறகு $ 500 அபராதம் விதிக்கப்பட்டது. அதுவும் செலுத்தப்பட்டுவிட்டது.

உரிமம் பெறுவது தனது விருப்பம் என்று ஸ்கெல்லி கூறினார். ஆனால், அது இன்னும் சாத்தியமில்லை.

கடந்த வாரத்தில் ஒரு வீடியோ வெளியிட்ட அவர், புதிய டொராண்டோ பொதுமுடக்கம் ஊழலின் மறுபிரவேசம் என்று கூறினார்.

மேலும் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கைகள் பொய்யாக உயர்த்தப்பட்டதாகக் கூறி, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு பார்பிக்யூவை திறந்து பொதுமக்கள் உள்ளே வர அனுமதித்தார்.

இது தொற்று நோய் பரவி வரும் நேரத்தில் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறும் என்பதால், அதிகாரிகளால் Adamson BBQ மூடப்பட்டது.

இதையும் படியுங்க: டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் போராட்டம் வெடித்தது!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.