பனிப்பொழிவு எச்சரிக்கை – சுற்றுச்சூழல் கனடா பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் வானிலை நிலவரம் அறிக்கை

britishcolumbia snowfall flood recovery

தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஃபிரேசர் பள்ளத்தாக்கு போன்ற வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 15 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு காலநிலைக்கு ஏற்ப நடவடிக்கைள் எடுக்கப்படும்.பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் வடிய தொடங்கியுள்ளது.மெரிட் போன்ற சில சமூகங்களில் வெள்ளத்தின் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த வெளியேற்ற உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தாம்சன் – நிகோலா,சி டூ ஸ்கை மற்றும் ஃபிரேசர் பள்ளத்தாக்கு போன்ற நீர் வழித்தடங்களுக்கு அருகிலுள்ள சொத்துக்களுக்கு வெளியேற்ற உத்தரவுகள் நடைமுறையில் உள்ளன. மேலும் மாகாணத்தின் பல நெடுஞ்சாலைகளும் பயண ஆலோசனையின் கீழ் அத்தியாவசிய போக்குவரத்தை மட்டும் அனுமதித்துள்ளது.

சுற்றுச்சூழல் கனடா வான்கூவர் கிழக்குப் பகுதியில் ஃபிரேசர் பள்ளத்தாக்கு மற்றும் ஃபிரேசர் கேன்யன் பள்ளத்தாக்கு மற்றும் மாகாணத்தின் சில பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலைப்பாதைகளில் 15 சென்டிமீட்டர் வரை பனி குவியும் என்று கூறியுள்ளது.

வரவிருக்கும் வானிலை தென்மேற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவின் பெரும்பாலான பகுதிகளின் வெள்ள மீட்பு பணிகளுக்கு உதவும் வகையில் அமையும் மேலும் ஓட்டுனர்களுக்கு வானிலை சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மாகாணத்தின் உள்பகுதி உறைபனி வெப்பநிலை ஃபிரேசர் ஆற்றின் நீர் மட்டத்தை குறைக்கும் என்று கூறுகின்றனர்.

குளிர்ச்சியான வானிலை ஆனது உயரமான இடங்களில் இருந்து பனி உருகுவதை தவிர்க்கும் என்பதால் பாதுகாப்பான சூழல் உருவாகும் என்று கூறப்படுகிறது