தண்ணீரா? டீசலா ? – கனடாவின் வடக்கு எல்லையில் நீரின்றி தவிக்கும் பழங்குடி மக்கள்

water pollution kerrosine
diesel water

கனடாவிலுள்ள இகாலூயிட் நகரத்தில் உள்ள நீர் தொட்டிகளில் எரிபொருள் கலந்துள்ளதை சோதனை முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெள்ளிக்கிழமை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனடாவின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள இகாலூயிட் நகரத்தின் நீர் தொட்டிகளில் ஒன்றின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் எரிபொருள் மூலக்கூறுகள் அதிக அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கனடாவின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள நுனாவுட்டின் தலைநகர் இகாலூயிட் நகரில் வசிக்கும் மக்கள் தண்ணீரில் எரிபொருள் நாற்றங்கள் உள்ளதாக தெரிவித்தனர். மேலும் தண்ணீர் தெளிவான நிலையில் இல்லை என்று கூறப்படுகிறது. தண்ணீரில் கலந்துள்ள எரிபொருள் மண்ணெண்ணெய் அல்லது டீசல் ஆக இருக்கும் என்று தலைநகரின் தலைமை நிர்வாக அதிகாரி எமி எல்கரிஸ்மா கூறினார்.

எரிபொருள் கலந்துள்ளது உறுதி செய்யப்பட்ட உடன் மக்கள் உணவு சமைப்பதற்கும்,குடிப்பதற்கும் தண்ணீரை உபயோகிப்பதை நிறுத்தச் சொல்லி நகரம் அவசரகால நிலையை அறிவித்தது. நிலத்தடி நீர் அல்லது மண் மாசுபாட்டின் காரணமாக எரிபொருள் நீரில் கலந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

தண்ணீரைக் கொதிக்க வைத்தாலும் பாதுகாப்பானதாக இருக்காது என்று குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2015ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஐந்து வருடத்திற்குள் கொதிக்கும் நீர் பிரச்சனைகளுக்குத் தீர்வு அளிப்பதாக கூறியிருந்த நிலையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்நிகழ்வு பிரதமருக்கு சர்ச்சையாக அமையும்.

உலகின் நன்னீர் 20 சதவீதம் கனடாவின் எல்லையில் இருந்தாலும் 45 சதவீத பழங்குடிமக்கள் கொதிக்கும் நீர் ஆலோசனைகளை கொண்டுள்ளனர். கனடாவில் 25% மக்கள் வறுமையில் வாழ்வதாக கனடிய வறுமை நிறுவனம் தெரிவித்துள்ளது.