டொரன்டோ நகரில் கடும் பனி மற்றும் பனிப் புயல் எச்சரிக்கை – வழுக்கும் தன்மையுடைய பனிக்கட்டிகளால் உருவாகும் விபத்துக்கள்

Weather
Weather Alert Toronto

டொரண்டோ நகரம் தொடர்ச்சியாக கடுமையான குளிர் காலநிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. கனடாவின் பெரும்பான்மையான பகுதிகளில் பனிப்பொழிவு மற்றும் குளிர்ந்த வெப்பநிலை நிலவி வருகிறது. உறைபனி காரணமாக டொரன்டோ நகருக்கு குளிர்கால எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது. குளிர்ந்த வெப்பநிலை காரணமாக பனிக்கட்டி நிலைமைகளை ஏற்படுத்தும் என்று புதன்கிழமை சுற்றுச்சூழல் கனடா தெரிவித்தது.

தெற்கு ஒண்டாரியோ முழுவதும் உறைபனி சூழ்ந்து இருப்பதாகவும் வெப்பநிலையானது அதிகபட்சம் ஒற்றை இலக்கங்களில் பதிவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக புதன்கிழமை வானிலை நிறுவனம் தெரிவித்தது. கடுமையான குளிர் மற்றும் உறைபனி ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை நிறுவனம் தெரிவித்தது.

புதன்கிழமை பிற்பகல் குளிர்ச்சியான காலநிலை தெற்கு ஒன்டாரியோவில் ஏற்படும். பின்னர் மாலை நேரத்தில் வெப்பநிலையானது திடீரென உறைபனிக்கு கீழே குறையும் என்று வானிலை நிறுவனம் கூறியுள்ளது. உறை பனியின் விளைவாக சாலைகள், வாகனம் நிறுத்தும் இடங்கள் மற்றும் நடைபாதைகள் போன்றவற்றில் முழுமையாக பனிக்கட்டிகளாகவும் வழுக்கும் தன்மையுடனும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

புதன்கிழமை சூறைக்காற்று அல்லது மழைக்கு 40% வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை மாலை -16C வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே இரவில் -20C ஆக இன்னும் குறையும் என்று கூறப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை டொரண்டோ மற்றும் ஒண்டாரியோ போன்ற பகுதிகளை பனி புயல் தாக்கியதை அடுத்து பனியை அகற்றும் நடவடிக்கையில் நகரம் ஈடுபட்டுள்ள நிலையில் மீண்டும் காலநிலை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு பனி அகற்றும் பணி நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.